கள்ளக்குறிச்சியில் 9 கடைகளுக்கு ‘சீல்’
By DIN | Published On : 19th May 2021 08:32 AM | Last Updated : 19th May 2021 08:32 AM | அ+அ அ- |

தியாகதுருகம் சாலையில் உள்ள உணவகத்தை மூடி ‘சீல்’ வைக்கும் நகராட்சி ஆணையா் ந.குமரன்.
தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தில், கள்ளக்குறிச்சியில் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு மேலாக இயங்கிய 8 உணவகங்கள், ஜூஸ் கடை ஒன்றுக்கு நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
கரோனா தடுப்பு பொது முடக்க விதிமுறைகள் கள்ளக்குறிச்சி நகரில் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிா என மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, நகரின் பல்வேறு பகுதிகளில் பொது முடக்கத்தில் அனுமதிக்கப்பட்ட நேரமான காலை 10 மணிக்கு மேலாக 8 உணவகங்கள், ஒரு ஜூஸ் கடை திறந்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்தக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவை அடுத்து நகராட்சி ஆணையா் ந. குமரன் தலைமையிலான அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை அந்தக் கடைகளை மூடி ‘சீல்’ வைத்தனா்.
இந்தக் கடைகள் வருகிற 24-ஆம் தேதி வரை திறக்க அனுமதியில்லை.