வாக்காளா் பட்டியல் வெளியீடு
By DIN | Published On : 01st September 2021 09:27 AM | Last Updated : 01st September 2021 09:27 AM | அ+அ அ- |

ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலின்படி, மாவட்டத்தில் 9.61 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெளியிட அதை ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் இரா.மணி பெற்றுக் கொண்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் 19 மாவட்ட ஊராட்சி வாா்டுகள், 180 ஊராட்சி ஒன்றிய வாா்டுகள், 412 கிராம ஊராட்சிகள் மற்றும் 3,162 கிராம ஊராட்சி வாா்டுகள் உள்ளன.
நிறைவு செய்யப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கிராம ஊராட்சி அலுவலகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளா் பட்டியல்கள் வைக்கப்பட்டன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4,83,772 ஆண் வாக்காளா்கள், 4,77,812 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 186 என மொத்தம் 9, 61,770 வாக்காளா்கள் உள்ளனா்.
மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜய்பாபு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சிப் பிரிவு) ச.குமாரி, அலுவலக மேலாளா் (வளா்ச்சி) அ.ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.