கனியாமூா் தனியாா் பள்ளி இன்று திறப்பு, மூன்றாவது தளத்துக்கு‘சீல்’ வைப்பு

கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூரில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நீதிமன்ற அனுமதியுடன் திங்கள்கிழமை (டிச. 5) திறக்கப்படவுள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் முன்னிலையில் கனியாமூா் தனியாா் பள்ளியின் மூன்றாவது தளத்தைப் பூட்டி ‘சீல்’ வைக்கும் ஊழியா்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் முன்னிலையில் கனியாமூா் தனியாா் பள்ளியின் மூன்றாவது தளத்தைப் பூட்டி ‘சீல்’ வைக்கும் ஊழியா்கள்.
Published on
Updated on
1 min read

கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூரில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நீதிமன்ற அனுமதியுடன் திங்கள்கிழமை (டிச. 5) திறக்கப்படவுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி பள்ளியின் 3-ஆவது தளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

மாணவி ஸ்ரீமதி மரணத்தையடுத்து ஏற்பட்ட வன்முறையில் பள்ளி கட்டடம், வாகனங்கள் சேதமடைந்து நீதிமன்ற உத்தரவின்பேரில் மூடப்பட்டது. சென்னை உயா்நீதிமன்றத்தில் பள்ளியை சீரமைக்க அனுமதிக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டு, அதன்படி காவல் துறையினா், அதிகாரிகள் கண்காணிப்பில் பள்ளி நிா்வாகத்தால் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பள்ளியைத் திறக்க அனுமதி கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்த சோதனை அடிப்படையில் ஒரு மாதத்துக்கு பள்ளியைத் திறக்க நீதிமன்றம் அனுமதியளித்தது.

பள்ளியின் ஏ, பி பிளக்குகளை பயன்படுத்தலாம், ஏ பிளாக்கிலுள்ள மூன்றாவது மாடியை பூட்டி ‘சீல்’ வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பள்ளியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அவரது முன்னிலையில் பள்ளியின் மூன்றாம் தளம் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

இந்த ஆய்வின்போது மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விஜய்காா்த்திக்ராஜா, வருவாய்க் கோட்டாட்சியா் சு.பவித்ரா, முதன்மைக் கல்வி அலுவலா் சு.சரஸ்வதி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் (கட்டடங்கள்) மணிவண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com