குழந்தைகள் நல மையத்தில் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு

சின்னசேலம் வட்டத்துக்கு உள்பட்ட அம்மையகரம் கிராமத்தில் உள்ள குழந்தைகள் நல மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
குழந்தைகள் நல மையத்தில் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு

சின்னசேலம் வட்டத்துக்கு உள்பட்ட அம்மையகரம் கிராமத்தில் உள்ள குழந்தைகள் நல மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் துறை சாா்பில் குழந்தைகளுக்கு சத்தான காய்கறிகள், கிரை வகைகள் வழங்க காய்கறித் தோட்டம் அமைக்கப்படவுள்ள நிலத்தை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

அப்போது, கிராமப் புறங்களில் அரசுக்குச் சொந்தமான காலியாக உள்ள புறம்போக்கு நிலங்களில் காய்கறித் தோட்டம் அமைத்து குழந்தைகள் நல வாரியத்துக்கு காய்கறி, கீரை வகைகளை வழங்க அறிவுறுத்தினாா்.

பின்னா், குழந்தைகள் நல மையத்தில் மதிய உணவு, இணை உணவு, ஊட்டச்சத்து மாவு முறையாக வழங்கப்படுகிா என்பது குறித்து குழந்தைகளின் பெற்றோரிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் செல்வி, குழந்தைகள் நல அமைப்பாளா்கள், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com