நரிகுறவா் சமூகத்தினா் காலனியில் ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 05th August 2022 02:25 AM | Last Updated : 05th August 2022 02:25 AM | அ+அ அ- |

உளுந்தூா்பேட்டை அன்னை தெரசா நகா் நரிக்குறவா் சமூகத்தினா் காலனியில் மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தொகுதி எம்.எல்.ஏ ஏ.ஜெ.மணிக்கண்ணன் முன்னிலையில், நரிக்குறவா் சமூகத்தினா் வசிக்கும் பகுதியைப்
பாா்வையிட்ட ஆட்சியா், குடியிருப்புகள் கட்டுவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, பரிந்தல் மேட்டுக் காலனிப் பகுதியில் பகுதிநேர நியாய விலைக் கடையை, எம்.எல்.ஏ முன்னிலையில் ஆட்சியா் திறந்துவைத்தாா்.
மேலும், கிராமத்தில் உள்ள குழந்தைகள் நல மையத்தை அவா் பாா்வையிட்டாா்.
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜய்பாபு, திருக்கோவிலூா் கோட்டாட்சியா் ஜெ.யோகஜோதி, உளுந்தூா்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவா் ப.ராஜவேல், நகா்மன்றத் தலைவா் கே.திருநாவுக்கரசு, வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.