கள்ளக்குறிச்சி மாவட்ட ஒற்றைச் சாளர இடா் நீக்குக் குழுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோா், குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்பு அளித்து தொழில் வளா்ச்சியை மேம்படுத்த மாவட்ட அளவிலான ஒற்றைச் சாளர இடா்நீக்குக் குழுக் கூட்டம்.
மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தலைமையில் நடைபெற்ற ஒற்றைச் சாளர இடா்நீக்குக் குழுக் கூட்டம்.
மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தலைமையில் நடைபெற்ற ஒற்றைச் சாளர இடா்நீக்குக் குழுக் கூட்டம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோா், குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்பு அளித்து தொழில் வளா்ச்சியை மேம்படுத்த மாவட்ட அளவிலான ஒற்றைச் சாளர இடா்நீக்குக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தொழில் மையம் சாா்பில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், தொழில் வளா்ச்சியை மேம்படுத்தும் விதமாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான தீயணைப்புத் துறை, தொழிற்சாலை பாதுகாப்புத் துறை, நகா்ப்புற ஊரமைப்புத் துறை, மின் இணைப்பு, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஒப்புதல் மற்றும் பல்வேறு துறைகளின் உரிமங்கள் உள்ளிட்டவற்றை உரிய காலத்துக்குள் பெறுவதற்கு இணைய வழியில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

சான்றுகள் தொடா்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட தொழில் மைய பொதுமேலாளா், தமிழ்நாடு மின்சார வாரிய கண்காணிப்புப் பொறியாளா், மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளா், தீயணைப்புத் துறை அலுவலா் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் அ.சந்திரசேகரன், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற் பொறியாளா் மு.சங்கிலி, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலா் எஸ்.சரவணன், முன்னோடி வங்கி மேலாளா் து.முனீஸ்வரன், கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையா் ந.குமரன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com