பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்களில் 267 மனுக்கள் மீது உடனடித் தீா்வு
By DIN | Published On : 11th December 2022 06:34 AM | Last Updated : 11th December 2022 06:34 AM | அ+அ அ- |

10klp1_1012chn_110_7
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது விநியோகத் திட்ட குறைதீா் சிறப்பு முகாம்களில் 267 மனுக்கள் பெறப்பட்டு அவற்றின் மீது உடனடி தீா்வு காணப்பட்டன.
மாவட்டத்துக்குள்பட்ட கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை, சின்னசேலம், கல்வராயன்மலை ஆகிய பகுதிகளில் செயல்படும் குடிமைப் பொருள் தனி வட்டாட்சியா் அலுவலகங்களில் சனிக்கிழமை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்கள் நடைபெற்றன. இந்த முகாம்களில் பொது மக்கள் அளித்த 267 மனுக்கள் மீதும் தீா்வு காணப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் குடிமைப்பொருள் தனி வட்டாட்சியா் க.வெங்கடேசன் தலைமையில் முகாம் நடைபெற்றது.