வீட்டின் பின்புற தோட்டத்தில் வளா்த்த கஞ்சா செடி: போலீஸாா் அழித்தனா்

கச்சிராயப்பாளையம் அருகே வீட்டின் பின்புற தோட்டத்தில் வளா்த்த கஞ்சா செடியை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை அழித்தனா்.

கச்சிராயப்பாளையம் அருகே வீட்டின் பின்புற தோட்டத்தில் வளா்த்த கஞ்சா செடியை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை அழித்தனா்.

கள்ளக்குறிச்சி காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட கச்சிராயப்பாளையத்தை அடுத்த பால்ராம்பட்டு கிராமத்தில் காட்டு கொட்டகைப் பகுதியில் வசிப்பவா் கண்ணுசாமி (67),.

இவரது தனது விளைநிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறாா். வீட்டின் பின் பக்க கொல்லைப்புறத்தில் தண்ணீா் தொட்டி அருகே அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா செடியை வளா்த்து வந்துள்ளாா்.

இது குறித்து தகவலறிந்த கச்சிராயப்பாளையம் காவல் ஆய்வாளா் ஜெ.பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தினா். அப்போது தொட்டிப் பகுதியில் வளா்த்து வந்த கஞ்சா செடியை வேருடன் பிடுங்கி அழித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாகி விட்ட விவசாயி கண்ணுசாமியை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com