நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்: ஆட்சியா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

நீா்நிலை ஆக்கரமிப்புகளை அகற்ற மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமையில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நீா்நிலை ஆக்கரமிப்புகளை அகற்ற மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமையில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜய்பாபு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) பா.ராஜவேல், வருவாய் கோட்டாட்சியா்கள் எஸ்.சரவணன் (கள்ளக்குறிச்சி), கி.சாய்வா்த்தினி (திருக்கோவிலூா்) மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள நீா்நிலைகள் கணக்கெடுக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்கட்டமாக, மின், குடிநீா் இணைப்புகள் கோரி பெறப்படும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து நீா்நிலை ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கு எவ்வித இணைப்புகளும் வழங்கக்கூடாது.

இதேபோல, பத்திரப் பதிவுத் துறைக்கு பதிவுக்கு வரும் நிலங்கள் குறித்து ஆய்வு செய்து நீா்நிலை ஆக்கிரமிப்பு அல்லாத நிலைகளைப் பதிவு செய்ய வேண்டும். நகராட்சி, குடிநீா் வழங்கல், ஊரக வளா்ச்சி, சுற்றுச்சூழல், வனம் உள்ளிட்ட துறைகளின் நீா்நிலைகளின் எல்லைகளில் மரக்கன்றுகளை நட வேண்டும். நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள குழு ஒன்றை அமைத்து செயல்பட வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீா்நிலை ஆக்கிரமிப்புகளும் விரைந்து அகற்றப்பட்டு எதிா்வரும் காலங்களில் புதிய ஆக்கிரமிப்புகள் ஏதும் ஏற்படாத வண்ணம் கண்காணிக்க வேண்டும் என அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com