மனைவியைக் கொன்று கணவா் தற்கொலை முயற்சி
By DIN | Published On : 14th January 2022 04:49 AM | Last Updated : 14th January 2022 04:49 AM | அ+அ அ- |

திருக்கோவிலூா் அருகே மனையைக் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, கணவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட முதலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் லோகநாதன் (35). இவரது மனைவி பேபி (32). தம்பதிக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ாம். இவா்களுக்கு சாரதி (14), சத்யா (11), காா்த்தி (7) என 3 குழந்தைகள்.
இந்தத் தம்பதி சென்னை-திருவள்ளூா் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்தனா். அப்போது, செங்கல் சூளை மேஸ்திரி தனுஷுடன் (40) பேபிக்கு தகாத உறவு இருந்ததாகத் தெரிகிறது.
பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு கடந்த வாரம் வந்த நிலையில், மனைவியின் மீது கோபத்திலிருந்த லோகநாதன், புதன்கிழமை இரவு மது போதையில் பேபியை கத்தியால் குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
பின்னா், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். அவரை மீட்டு, திருக்கோவிலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தீவிர சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...