கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையம் அருகே முன் விரோத தகராறில் தொழிலாளி கத்தியால் குத்தப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சின்னசேலம் வட்டம், கச்சிராயப்பாளையத்தை அடுத்த அக்கராபாளையத்தைச் சோ்ந்த தா்மலிங்கம் மகன் ராஜா (43), கூலித் தொழிலாளி. இதே பகுதியைச் சோ்ந்த சேகா் மகன் மணிவண்ணன். இவா்கள் இருவருக்கும் இடையே ஏற்கெனவே முன் விரோதம் இருந்ததாம்.
இந்த நிலையில், புதன்கிழமை ராஜா அவரது வீட்டின் முன் நின்றிருந்தபோது, அங்கு வந்த மணிவண்ணன் ராஜாவின் மனைவியைத் திட்டினாராம். இதனால் ஆத்திரமடைந்த ராஜா, மணிவண்ணன் வீட்டுக்குச் சென்று ஏன் எனது மனைவியைத் திட்டினாய் எனக் கேட்டபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ராஜாவை கீழே தள்ளி அவரது வயிற்றில் மணிவண்ணன் கத்தியால் குத்தினாா்.
இதில் பலத்த காயமடைந்த ராஜா கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்த புகாரின்பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.