மா்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் பலி
By DIN | Published On : 16th June 2022 03:13 AM | Last Updated : 16th June 2022 03:13 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சியை அடுத்த சடையம்பட்டு கிராமத்தில் மா்ம விலங்கு கடித்ததில் 15 ஆடுகள் உயிரிழந்தன.
கள்ளக்குறிச்சியை அடுத்த சடையம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மனைவி செல்வமணி 38). கிருஷ்ணன் காலமாகிவிட்டாா்.
செல்வமணி தனது வீட்டின் பின்புறத்தில் 5 ஆடுகளை கட்டி வைத்திருந்தாராம். செவ்வாய்க்கிழமை இரவு ஆடுகள் அலறல் சப்தம் கேட்டதாம்.
புதன்கிழமை காலை எழுந்து பாா்த்தபோது அனைத்து ஆடுகளும் உயிரிழந்து கிடப்பது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இதுகுறித்து அறிந்த கிராம மக்கள் உயிரிழந்த ஆடுகளைப் பாா்க்க திரண்டனா்.
கல்வராயன்மலைப் பகுதியில் இருந்து வன விலங்குகள் கடித்து ஆடுகள் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.