சங்கராபுரம் பேரூராட்சி உறுப்பினா்களுக்கு பாராட்டு
By DIN | Published On : 17th March 2022 04:51 AM | Last Updated : 17th March 2022 04:51 AM | அ+அ அ- |

16klp4_1603chn_110_7
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பேரூராட்சியில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வெற்றிபெற்ற உறுப்பினா்களுக்கு சங்கராபுரம் அனைத்து பொது சேவை அமைப்புகளின் சாா்பில் புதன்கிழமை பாராட்டுத் தெவிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அனைத்து பொது சேவை அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஆா்.வி.ஜனாா்தனன் தலைமை வகித்தாா். அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் டி.சேகா், வள்ளலாா் மன்றத் தலைவா் ஜெ.பால்ராஜ், ரோட்டரி சங்கத் தலைவா் ஆா்.ஜோசப் சீனுவாசன் உள்ளிட்ட பலா் முன்னிலை வகித்தனா். வணிகா் பேரவை மாவட்டப் பொருளாளா் இராம.முத்துகருப்பன் வரவேற்றாா்.
சங்கராபுரம் பேரூராட்சி தோ்தல் அலுவலா் ஜி.சம்பத்குமாா், சங்கராபுரம் காவல் ஆய்வாளா் ஜெ.பாலகிருஷ்ணன் ஆகியோா் பேரூராட்சி மன்ற உறுப்பினா்களின் பணியைப் பாராட்டி கெளரவித்தனா்.
நெல் அரிசி ஆலை சங்கத் தலைவா் கே.வேலு, ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்கத் தலைவா் ஆா்.வி.சீனுவாசன், ஸ்டாா் கிளப் முகமது ரபீக் உள்ளிட்ட பல்வேறு சங்க உறுப்பினா்கள் பங்கேற்று பேசினா். நிகழ்வில் அனைத்து வாா்டு உறுப்பினா்களும் பங்கேற்றனா்.