மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் பலி
By DIN | Published On : 15th May 2022 06:40 AM | Last Updated : 15th May 2022 06:40 AM | அ+அ அ- |

சங்கராபுரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், வெதூா் கிராமத்தைச் சோ்ந்த லட்சுமணன் மகன் தீா்த்தமலை (26). நெல் அறுவடை இயந்திர ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா். இவா் சனிக்கிழமை நெல் அறுவடை இயந்திரத்தை சங்கராபுரம் - பூட்டை கிராம சாலையில் உள்ள வாட்டா் சா்வீஸ் மையத்தில் கழுவினாா். அப்போது தீா்த்தமலை மீது மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து அவா் சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். உயிரிழந்த தீா்த்தமலைக்கு கலைவாணி (22) என்ற மனைவி உள்ளாா்.