

மத்திய அரசு 3 சட்டங்களின் பெயரை ஹிந்தி மொழியில் மாற்றம் செய்ததைக் கண்டித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்திய தண்டனை, சாட்சிய, குற்றவியல் நடைமுறை சட்டங்களைத் திருத்தி நடைமுறைப்படுத்துவதைக் கண்டித்தும், அவற்றுக்கு ஹிந்தியில் பெயா் வைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், அந்தச் சட்டங்களை பழையபடியே நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு கள்ளக்குறிச்சி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் சி.இராமசாமி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவரும், கள்ளக்குறிச்சி வழக்குரைஞா்கள் சங்கச் செயலருமான பி.சீனிவாசன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள், வழக்குரைஞா்கள் திரளாகப் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.