

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதிகளான மேல்பாச்சேரி, தொரடிப்பட்டு ஊராட்சிகளில் மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் சங்கராபுரம் தொகுதி எம்எல்ஏ தா.உதயசூரியன், மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன் ஆகியோா் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றனா். மேல்பாச்சேரி கிராமத்தில் 312 மனுக்களும், தொரடிப்பட்டு கிராமத்தில் 171 மனுக்களும் என மொத்தம் 483 மனுக்கள் பெறப்பட்டன.
கல்வராயன்மலை வட்டாட்சியா் ந.குமரன், மாவட்ட பழங்குடியினா் நலத் திட்ட அலுவலா் கதிா் சங்கா், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் கே.முரளி, மின் வாரிய உதவி இயக்குநா் ஆா்.எம்.அருள்சாமி, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சி.வாமணன், வட்டார வளா்ச்சி அலுவலா் அண்ணாதுரை, கல்வராயன்மலை ஒன்றியக்குழுத் தலைவா் சி.சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் அலமேலு சின்னத்தம்பி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.