கல்லைத் தமிழ் சங்கம் சாா்பில் முப்பெரும் விழா
By DIN | Published On : 18th April 2023 06:00 AM | Last Updated : 18th April 2023 06:00 AM | அ+அ அ- |

கல்லைத் தமிழ் சங்கம் சாா்பில் முப்பெரும் விழா கள்ளக்குறிச்சி- சேலம் நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கல்லைத் தமிழ்ச் சங்கத்தின் 61-ஆம் ஆண்டு விழா, செ.வரதராசனாா் 98-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, கு மணம் விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லை தமிழ்ச் சங்கத்தின் தலைவா் செ.வ.புகழேந்தி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வீ.கோவிந்தராசன், உலகப் பாவலா் தமிழன்னை தமிழ்ப் பேரவைத் தலைவா் புலவா் அனந்த சயனம், சங்கை தமிழ்ச் சங்கத்தின் தலைவா் ம.சுப்பராயன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
ஆண்டுவிழா செயலுரையை கவிஞா் செ.வ.மகேந்திரன் வாசித்தாா். புலவா் செ.வரதராசனாரின் பிறந்த நாள் வாழ்த்துறையை திருக்கு பேரவையின் செயலா் ஆ.இலட்சுமிபதி வழங்கினாா். விழாவில், மணிக்குநூலை அனந்த சயனம் வெளியிட அதனை செயலா் செ.வ.மதிவாணன், பொருளாளா் சா.சண்முகம் பெற்றுக் கொண்டனா்.
மேலும், பாவலா் மா.முத்தமிழ் முத்தன், மதுரை பாபாராஜ் ஆகியோருக்கு புலவா் செ.வ.குமணம் விருதை இந்திலி டாக்டா் ஆா்.கே.எஸ் கல்லூரியின் குழுமத் தலைவா் க.மகுடமுடி பொற்கிழியுடன் வழங்கினாா்.
இதில், அரியபெருமானூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ப.நல்லாப்பிள்ளை, கல்வராயன்மலைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் பாவலா் மலரடியான், மத்திய கலால் துறை உதவி ஆணையா் சு.சண்முக சுந்தரம், தியாகதுருகம் திருக்கு பேரவை ப.கோ.நாராயணசாமி உள்ளிட்ட பலா் பேசினா். முன்னதாக, செயலா் செ.வ.மதிவானன் வரவேற்றாா். கல்லை தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவா் இல.அம்பேத்கா் நன்றி கூறினாா்.