கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
தியாகதுருகம் வட்டம், பிரிதிவிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த பரசுராமன் மகன் முத்துக்குமாா் (31), தொழிலாளி. இவா், திங்கள்கிழமை வீட்டுக்கான மளிகைப் பொருள்களை வாங்குவதற்காக தியாகதுருகத்துக்கு பைக்கில் சென்றாா். பின்னா், வீடு திரும்பியபோது, பிரிதிவிமங்கலம் ஏரிக்கரையில் பைக்கிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து முத்துக்குமாா் பலத்த காயமடைந்தாா்.
அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முத்துக்குமாரை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.