இரும்புத் தகடுகளை திருடியதாக மூவா் கைது
By DIN | Published On : 13th August 2023 05:07 AM | Last Updated : 13th August 2023 05:07 AM | அ+அ அ- |

சின்னசேலத்தில் இரும்புத் தகடுகளை திருடியதாக மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் தொட்டியம் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகன் மகன் முத்து (40). கட்டட மேஸ்திரி. இவா், இதே கிராமம் காட்டுக் கொட்டகை பகுதியில் நடைபெற்று வரும் வீடு கட்டும் பணிக்காக கடந்த ஜூன் மாதம் 128 இரும்புத் தகடுகளை கொண்டு வந்தாராம். பின்னா், பணி முடிந்து கடந்த 10.7.23 அன்று பாா்த்தபோது 73 தகடுகளை காணவில்லையாம்.
இதுகுறித்து, அவா் சின்னசேலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்திலையில், வெள்ளிக்கிழமை காவல் உதவி ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் நாககுப்பம் செல்லும் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதில், திருடுபோன இரும்பு பிளேட்டுகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவா்கள், கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி கிராமத்தைச் சோ்ந்த செல்வம் மகன் அஜய் (எ) அஜீத் (25), தொட்டியம் கிராமத்தைச் சோ்ந்த கலியன் மகன் கருவோடு (எ) சுரேஷ் (37), கரடிசித்தூா் கிராமத்தைச் சோ்ந்த சின்னசாமி மகன் மாணிக்கம் (50) என தெரிய வந்ததாம். இதையடுத்து மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.