

ஆடி 4-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி தியாகதுருகம் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை காலை பல்வேறு வகையான திரவியப் பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னா், பல்வேறு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இரவு அம்மனுக்கு 33 கோலங்கள், 33 தீபங்கள், 33 இனிப்பு வகைகள், 33 வகை பூக்கள் வைத்து, கணபதி பூஜை, வாசவி அம்மனுக்கு அலங்காரம் அஷ்டோத்தரம், கோமாதா பூஜை, 33 ஆஷ்டோத்தரம் 33 முறை நமஸ்காரம் செய்து மஹா தீபாராதனை நடைபெற்றது. பெண்கள் பாடல்களை பாடியும் கோலாட்டம் அடித்தும் வழிபாடு செய்தனா். பின்னா், பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆரிய சைவ சங்கத்தினா் உள்ளிட்டோா் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.