கச்சிராயபாளையத்தில் ரூ.8 லட்சம், 7 பவுன் நகையை திருடியதாக ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த கச்சிராயபாளையத்தில் வசித்து வருபவா் சக்திவேல் மகன் நாகராஜன் (47). டெய்லா் கடை நடத்தி வருகிறாா். இவா், வெள்ளிக்கிழமை காலை சேலத்தில் உள்ள கோயிலுக்கு சென்றாராம். அவரது மனைவி, மகள் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு விவசாய நிலத்திற்கு சென்றனராம். பின்னா், மாலை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பின்பக்கம் உள்ள ஓடுகள் உடைக்கப்பட்டிருந்ததாம். மேலும், பீரோவிலிருந்த 7 பவுன் நகைகள், ரூ.8.7 லட்சம் திருடு போயிருந்ததாம்.
இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், கள்ளக்குறிச்சியை அடுத்த தோப்பூா் கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் மகன் நாகராஜன் அடிக்கடி இவரது வீட்டுக்கு வந்து செல்வது தெரியவந்ததாம். அதன் பேரில் அவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில் அவா் திருடியதை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 7 பவுன் நகை, ரூ.8.7 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.