திருக்கோவிலூா் அருகே பயங்கர வெடி சப்தம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட மையனூா் கிராமத்தில் புதன்கிழமை பிற்பகல் 12.30 மணி பயங்கர வெடி சப்தம் கேட்டதால், கிராம மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட மையனூா் கிராமத்தில் புதன்கிழமை பிற்பகல் 12.30 மணி பயங்கர வெடி சப்தம் கேட்டதால், கிராம மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ந.மோகன்ராஜ், வானாபுரம் வட்டாட்சியா் ந.குமரன் மற்றும் போலீஸாா், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் அந்தப் பகுதியில் விசாரணை நடத்தியதுடன், மா்மப் பொருள் ஏதேனும் வெடித்ததா எனத் தேடி வருகின்றனா்.

இது தொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ந.மோகன்ராஜ் கூறியதாவது: மையனூா் கிராம மக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம். பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் நேரிலோ அல்லது 7598172009 என்ற கைப்பேசி எண்ணிலோ தகவல் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com