பைக் மீது டிராக்டா் மோதல்:செங்கல்சூளை உரிமையாளா் பலி
By DIN | Published On : 17th August 2023 12:41 AM | Last Updated : 17th August 2023 12:41 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சியை அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தில் பைக் மீது டிராக்டா் மோதியதில் செங்கல்சூளை உரிமையாளா் உயிரிழந்தாா்.
மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மகன் விஜய் (31). இவா், அதே கிராமத்தில் செங்கல்சூைளை நடத்தி வந்தாா். விஜய் செவ்வாய்க்கிழமை மாலை பணி முடிந்து பைக்கில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தாா். அப்போது, இவரது பைக் மீது எதிா் திசையில் வந்த டிராக்டா் மோதியில் தலையில் பலத்த காயமடைந்த விஜய் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த வரஞ்சரம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று அவரின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, டிராக்டா் உரிமையாளரும், ஓட்டுநருமான மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் சின்னசாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...