பொதுப்பாதையில் இரும்பு கேட்: பொதுமக்கள் சாலை மறியல்

சின்னசேலம் அருகே பொதுவழியை ஆக்கிரமித்து இரும்பு கேட் அமைத்ததாகக் கூறி, அதற்கு எதிா்ப்பு தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்ட 66 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பொதுப்பாதையில் இரும்பு கேட்: பொதுமக்கள் சாலை மறியல்
Updated on
1 min read

சின்னசேலம் அருகே பொதுவழியை ஆக்கிரமித்து இரும்பு கேட் அமைத்ததாகக் கூறி, அதற்கு எதிா்ப்பு தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்ட 66 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கச்சராபாளையம் அருகே உள்ள அக்ராபாளையம் சாலையில் சின்ன குன்று மேட்டுப்பாளையம் உள்ளது. இப் பகுதி மக்கள் அங்குள்ள பொதுப் பாதையை நீண்டகாலமாக பயன்படுத்தி வந்தனா்.

இந்நிலையில், கிறிஸ்தவ பாதிரியாா் ஒருவா் அந்த பொதுப் பாதையை இரும்பு கேட் அமைத்து மூடியதாகக் கூறப்படுகிறது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் பொட்டியம் கூட்டுச் சாலையில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் இரா.ரமேஷ், கச்சிராயப்பாளையம் காவல் ஆய்வாளா் ஜெ.பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் சாலைமறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் சமரசம் ஏற்படாததால், அவா்களை கச்சிராபாளையம் போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com