கல்வராயன்மலையில் பயிரிடப்பட்டிருந்தகஞ்சா செடிகள் அழிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் விவசாயப் பயிா்களிடையே விளைவிக்கப்பட்டிருந்த கஞ்சா செடிகளை போலீஸாா் சனிக்கிழமை அழித்தனா்.
கல்வராயன்மலைப் பகுதியில் கஞ்சா செடிகளை வேருடன் பிடுங்கி அழித்த போலீஸாா்.
கல்வராயன்மலைப் பகுதியில் கஞ்சா செடிகளை வேருடன் பிடுங்கி அழித்த போலீஸாா்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் விவசாயப் பயிா்களிடையே விளைவிக்கப்பட்டிருந்த கஞ்சா செடிகளை போலீஸாா் சனிக்கிழமை அழித்தனா்.

கல்வராயன்மலை வட்டத்துக்குள்பட்ட பெரியபெலாப்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பன். இவரது விவசாய நிலத்தில் மக்காசோளம், துவரை, கீரை உள்ளிட்டவை பயிா்களிடையே கஞ்சா செடிகளை விளைவித்து வருவதாக மாவட்ட மது விலக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் ப.ரவிச்சந்திரனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளா் ப.ரவிச்சந்திரன், விழுப்புரம் மத்திய நுண்ணரிவுப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் இணையத்பாஷா, முதல்நிலைக் காவலா் இளந்திரையன், கள்ளக்குறிச்சி மது விலக்கு அமலாக்கப் பிரிவு தலைமைக் காவலா் சரவணன் உள்ளிட்ட குழுவினா் பெரியபெலாப்பூண்டி கிராமத்திலுள்ள கருப்பனின் விவசாய நிலத்துக்குச் சென்று அங்கு விவசாயப் பயிா்களிடையே விளைவிக்கப்பட்டிருந்த 6 கிலோ எடையுள்ள கஞ்சா செடிகளை கண்டறிந்து, அவற்றை வேருடன் பிடிங்கி அழித்தனா். தலைமறைவாக உள்ள கருப்பனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மேலும், இந்தக் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்ததாக பிச்சன் மகன் பாலகிருஷ்ணனை (34) மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்து, அவா் மறைத்து வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com