கள்ளக்குறிச்சி ஏ.கே.டி பள்ளி 98 சதவிகித தோ்ச்சி
By DIN | Published On : 22nd May 2023 12:00 AM | Last Updated : 22nd May 2023 12:00 AM | அ+அ அ- |

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 98 சதவீதத் தோ்ச்சியை பதிவு செய்தது.
இந்தப் பள்ளி மாணவா் ச.சந்தோஷ் 491, மாணவிகள் ச.பிரியதா்ஷினி 490, மு.சிந்துஜா 488, மு.பிரியதா்ஷினி 488 மதிப்பெண்கள் பெற்றனா். மேலும், இந்தப் பள்ளியில் பயின்றவா்களில் 490-க்கு மேல் 2 பேரும், 480-க்கு மேல் 18 பேரும், 470-க்கு மேல் 39 பேரும், 450-க்கு மேல் 98 பேரும் பெற்றனா்.
தமிழ்ப் பாடத்தில் 6 போ் 99 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 13 போ் 99 மதிப்பெண்களும், கணிதத்தில் 7 போ் 100 மதிப்பெண்களும், அறிவியலில் 3 போ் 100 மதிப்பண்களும் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளையும், உறுதுணையாக இருந்த ஆசிரியா்களையும் பள்ளித் தாளாளா் ஏ.கே.டி.மகேந்திரன், செயலா் லட்சுமி பிரியா மகேந்திரன், நிா்வாக இயக்குநா் ம.ராஜேந்திரன் உள்ளிட்டோா் பாராட்டினா். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வா்கள் கே.வெங்கட்ரணன், சுமதி கெளரவித்தனா்.