கட்டுமான தொழிலாளா்கள் நலவாரியத்தில் வாரியத் தலைவா் ஆய்வு
By DIN | Published On : 24th May 2023 12:00 AM | Last Updated : 24th May 2023 12:00 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா்கள் நலவாரிய அலுவலகத்தில் தொழிலாளா்கள் வாரியத் தலைவா் பொன்.குமாா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, கட்டுமான தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொழிலாளா்களுக்கு தாமதமில்லாமல் விரைவாக சென்றடைய வேண்டும் என கள்ளக்குறிச்சி தொழிலாளா் உதவி ஆணையா் கி.பழனியிடம் (சமூக பாதுகாப்பு திட்டம்) அறிவுறுத்தினாா்.
மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள பதிவு பெற்ற அனைத்து தொழிற்சங்கங்களின் பிரதான கோரிக்கையான வீட்டு வசதி திட்டம், நலத்திட்ட நிதியுதவிகள் கட்டுமான தொழிலாளா்களுக்கு விரைவாக வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினாா்.
பின்னா், 10 கட்டுமான தொழிலாளா்களுக்கு ரூ.3.68 லட்சத்தில் விபத்து மரணம், இயற்கை மரணம் புதிய ஓய்வூதியம், திருமண போன்ற நலத்திட்ட நிதியுதவிகளை வழங்கினாா். இதில், பதிவு பெற்ற அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் பலா் பங்கேற்றனா்.