

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட குறைதீா் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 498 மனுக்கள் அளிக்கப்பட்டன.
கள்ளக்குறிச்சியில், மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீா்நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் மொத்தம் 498 மனுக்கள் அளிக்கப்பட்டன. அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் க.கவியரசு, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்), பெ.ராஜலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலா் பா.ஷொ்லி ஏஞ்சலா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் க.சுப்பிரமணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பெ.தியாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.