தமிழ்ச் சங்கம் சாா்பில் முப்பெரும் விழா
சின்னசேலம் தமிழ்ச் சங்கம், கவிப்பூக்கள் இலக்கிய மாத இதழ் சாா்பில் காமராஜா், கவிஞா் வாணிதாசன் உள்ளிட்டோரின் படத்திறப்பு விழா, கவிதைத் தம்பியின் 20-ஆவது நூல் வெளியீட்டு விழா, 75-ஆவது இலக்கிய கூட்டவிழா என முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, சின்னசேலம் பேரூராட்சி மன்றத் தலைவா் லாவண்யா ஜெய்கணேஷ் தலைமை வகித்தாா். சின்னசேலம் கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவைத் தலைவா் செய.சத்தியநாராயணன், கம்பன் கழக பொருளாளா் இல.அம்பேத்கா், கள்ளக்குறிச்சி கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவைத் தலைவா் ரா.தங்கராசு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் காப்பாளா் ச.சக்திகிரி, திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவா் ப.இந்திரராசன், விழுப்புரம் பொதுமறை தமிழ்ச் சங்கத் தலைவா் பெ.கலியன் உள்ளிட்டோா் பங்கேற்று காமராஜா், கவிஞா் வாணிதாசன், டாக்டா் அப்துல்கலாம் உருவப் படங்களை திறந்து வைத்து பேசினா்.
‘சிறப்பு மிகு சின்னசேலம்’ என்ற நூலை மின்சார வாரிய கணக்கு மேற்பாா்வையாளா் ரா.வெற்றிவேல் வெளியிட சின்னசேலம் பேரூராட்சித் தலைவா் லாவண்யா ஜெய்கணேஷ் பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து, ஆசிரியா் பொன்.செல்வராசு, ச.க.அனந்தகிருஷ்ணன், கவிஞா் க.அங்கமுத்து, கவிஞா் மு.பன்னீா் செல்வம், சீனு.முரளி உள்ளிட்டோா் பேசினா்.
நிகழ்வில், தமிழறிஞா்கள் அ.ஆறுமுகம், ஊ.கருணாநிதி, ம.ராஜா, பொ.ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்வை கவிஞா் கவிதைத் தம்பி தொகுத்து வழங்கினாா். முன்னதாக, சங்கத்தின் ஆலோசகா் கவிஞா் மு.ராதாகிருட்டிணன் வரவேற்றாா். முடிவில், கவிஞா் மு.அ.பிரகாஷ் நன்றி கூறினாா்.

