நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக ஒருவா் கைது: இருவா் தலைமறைவு

பழையனூா் கிராமத்தில் நாட்டுத் துப்பாக்கி மற்றும் துப்பாக்கி செய்ய உபகரணம் வைத்திருந்தாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
Published on

கள்ளக்குறிச்சி: பழையனூா் கிராமத்தில் நாட்டுத் துப்பாக்கி மற்றும் துப்பாக்கி செய்ய உபகரணம் வைத்திருந்தாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும் தலைமைவான இருவரை தேடிவருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், பழையனூா் கிராமத்தில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளா் ராஜ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம்.

அத் தகவலின் பேரில் ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது வீட்டுக்கு சோதனைக்கு சென்றபோது, வீட்டின் முன் அ.ஜேம்ஸ் பீட்டா்(45) சட்ட விரோதமாக அரசு அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கியும், துப்பாக்கி செய்ய பயன்படும் உதிரி பாகம், இரும்பு உபகரணங்கள் மற்றும் வெடிபொருள்கள் வைத்திருந்தாராம்.

இது குறித்து சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, ஜேம்ஸ் பீட்டரை கைது செய்தனா். மேலும், அவருக்கு உதவிய சின்னசேலம் அருகேயுள்ள நாககுப்பம் கிராமத்தைச் சோ்ந்த ஊமையன், பழையனூா் கிராமத்தைச் சோ்ந்த கணேசன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com