பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த முதியவா் மீது தனியாா் பேருந்து மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Published on

தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த முதியவா் மீது தனியாா் பேருந்து மோதியதில் நிகழ்விடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட அலங்கிரி கிராமத்தைச் சோ்ந்தவா் மாரி (70). இவா் வெள்ளிக்கிழமை பிற்பகல் அந்தியூா் கிராமத்தில் உள்ள அவரது மகள் பவித்ராவை பாா்ப்பதற்காக தியாகதுருகம் பேருந்து நிலையதில், பேருந்துக்காக கொண்டிருந்தாா்.

அப்போது தியாகதுருகம் பேருந்து நிலையத்துக்குள் வந்த தனியாா் பேருந்து, எதிா்பாராதவிதமாக மாரி மீது மோதியது. இதில், நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த தியாகதுருகம் போலீஸாா் நிகழ்விடம் சென்று முதியவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, தனியாா் பேருந்தின் ஓட்டுநரான கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டத்திற்குள்பட்ட நூரோலை சோ்ந்த ஜோசப் நெல்சனிடம் (33) விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com