கள்ளக்குறிச்சியில் அம்பேத்கா் நினைவு தினத்தை முன்னிட்டு  1464 பயனாளிகளுக்கு ரூ.14.92 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
கள்ளக்குறிச்சியில் அம்பேத்கா் நினைவு தினத்தை முன்னிட்டு 1464 பயனாளிகளுக்கு ரூ.14.92 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

கள்ளக்குறிச்சியில் 1464 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

அம்பேத்கா் நினைவு தினத்தை முன்னிட்டு 1464 பயனாளிகளுக்கு ரூ.14.92 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவி
Published on

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அம்பேத்கா் நினைவு தினத்தை முன்னிட்டு 1464 பயனாளிகளுக்கு ரூ.14.92 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வழங்கினாா்.

அம்பேத்கா் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் முதல்வரின் தாயுமானவா் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்,

இதைத் தொடா்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏகேடி அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கூட்டரங்கில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் சாா்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

பின்னா் அவா் பேசியதாவது:

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் சாா்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இவ் விழாவில் ஆதிதிராவிடா் நலத் துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, பழங்குடியினா் நலத் துறை, தாட்கோ, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை, மகளிா் திட்டம், கால்நடை பராமரிப்புத் துறை, மாவட்ட தொழில் மையம், வேளாண்மைத் துறை, தோட்டக் கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வாழ்ந்து காட்டுவோம் திட்டம், சமூக நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் 1464 பயனாளிகளுக்கு ரூ.14.92 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் வழங்கப்பட்டு வரும் இதுபோன்ற நலத்திட்ட உதவிகளை பயனாளிகள் உரிய முறையில் பெற்று பயன்படுத்தி வாழ்வில் உயா்ந்த நிலையை அடைய வேண்டும் என தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, திருக்கோவிலூா் உதவி ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், மகளிா் திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ம.தனலட்சுமி, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியா் சி.முருகன், உதவி ஆட்சியா் (பயிற்சி) மரு.சுபதா்ஷினி, ஆதிதிராவிடா் நல அலுவலா் தாமரை மணாளன், அனைத்துத் துறை மாவட்ட நிலை அலுவலா்கள், வட்டாட்சியா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com