பள்ளியில் மின்னணு பொருள்கள் திருட்டு

ஆவிபுதூா் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மின்னணு பொருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
Published on

கள்ளக்குறிச்சி: ஆவிபுதூா் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மின்னணு பொருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருக்கோவிலூா் வட்டம், ஆவிபுதூா் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

பள்ளியை கடந்த 3-ஆம் தேதி பூட்டி விட்டுச் சென்றனா்.

மறுநாள் காலை பள்ளியை திறக்க வந்தபோது, தலைமை ஆசிரியா் அறையின் கதவை வெல்டிங் வைத்து உடைத்துள்ளனா்.

பின்னா், அறையில் இருந்த கணினி அறையின் சாவியை எடுத்து, அந்த அறையைத் திறந்து உள்ளே இருந்த புரஜெக்டா், ஸ்பீக்கா், பேட்டரி பேக்கப் உள்ளிட்ட மின்னணு பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து திருக்கோவிலூா் காவல் நிலையத்தில் பள்ளித் தலைமை ஆசிரியா் சி.ஆனந்தி புகாா் அளித்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி

வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com