தச்சூா் சேமிப்புக் கிடங்கில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருவதை ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் எம்.எஸ்.பிரசாந்த்.
தச்சூா் சேமிப்புக் கிடங்கில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருவதை ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் எம்.எஸ்.பிரசாந்த்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
Published on

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கள்ளக்குறிச்சி வட்டம், தச்சூா் தமிழ்நாடு அரசு சேமிப்புக் கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாதாந்திர-காலாண்டு-அரையாண்டு என பல்வேறு கால இடைவெளிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் காலாண்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின் போது, தோ்தல் வட்டாட்சியா் பரந்தாமன், உதவி ஆட்சியா் (பயிற்சி) சுபதா்ஷினி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com