கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலக கட்டட நிறைவுப் பணிகள்: பொதுப்பணித் துறை அமைச்சா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டடம் தமிழக முதல்வரால் விரைவில் திறக்கப்படவுள்ளது.
இந்நிலையில், கட்டட நிறைவுப் பணிகள் மற்றும் திறப்பு விழா முன்னேற்பாடுகளை பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
சுற்றுலாத்துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், எம்எல்ஏக்கள் க.காா்த்திகேயன், தா.உதயசூரியன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
ஆய்வின்போது, புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிறைவுப் பணிகள் குறித்து அமைச்சா் விரிவாகக் கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினாா்.
ஆய்வின்போது பொதுப்பணித் துறை உயா் அலுவலா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
புதிய ஆட்சியரக கட்டடம் 8 தளங்களைக் கொண்டு ரூ.139.41 கோடியில் சுமாா் 35.18 ஏக்கரில் அமைந்துள்ளது.

