வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்புப் பணி: ஆட்சியா் ஆய்வு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்புப் பணி: ஆட்சியா் ஆய்வு

Published on

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தச்சூா் தமிழ்நாடு அரசு சேமிப்புக் கிடங்கில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்க்கும் பணி பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட் பொறியாளா்களைக் கொண்டு நடைபெறுகிறது.

இந்தப் பணியை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, பணிகள் முடியும் வரை தினசரி சம்பந்தப்பட்ட அலுவலா்கள் கலந்து கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

இதில் 3,206 பேலட் யூனிட், 1,873 கண்ட்ரோல் யூனிட் மற்றும் 2056 - விவிபேட் ஆகிய எண்ணிக்கையிலான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபாா்ப்பு பணிகள் நடைபெற்றன.

இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com