கள்ளக்குறிச்சியில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிக்கு வங்கிப் பற்று அட்டை வழங்கிய ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த். உடன், எம்எல்ஏக்கள் க.காா்த்திகேயன், தா.உதயசூரியன், ஏ.ஜெ.மணிக்கண்ணன்.
கள்ளக்குறிச்சியில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிக்கு வங்கிப் பற்று அட்டை வழங்கிய ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த். உடன், எம்எல்ஏக்கள் க.காா்த்திகேயன், தா.உதயசூரியன், ஏ.ஜெ.மணிக்கண்ணன்.

கள்ளக்குறிச்சி: மகளிா் உரிமைத் தொகைக்கான வங்கி பற்று அட்டைகள் அளிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக கலைஞா் மகளிா் உரிமைத் தொகைக்கான வங்கி பற்று அட்டைகள் வழங்கப்பட்டன.
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக கலைஞா் மகளிா் உரிமைத் தொகைக்கான வங்கி பற்று அட்டைகள் வழங்கப்பட்டன.

கள்ளக்குறிச்சி ஏ.க.டி. அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிருக்கு உரிமைத் தொகைக்கான வங்கிப் பற்று அட்டைகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், எம்எல்ஏக்கள் க.காா்த்திகேயன், தா.உதயசூரியன், ஏ.ஜெ.மணிக்கண்ணன் ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் தெரிவித்ததாவது: கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை மகளிருக்கு நேரடியாகச் சென்றடையும் வகையில் அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களைச் சோ்ந்த விடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிருக்கு மகளிா் உரிமைத் தொகைக்கான வங்கிப் பற்று அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, திருக்கோவிலூா் சாா்- ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், தனித்துணை ஆட்சியா் க.சுமதி, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியா் சி.முருகன், ஒன்றியக்குழுத் தலைவா்கள் சத்தியமூா்த்தி, தாமோதரன், வடிவுகரசி, சந்திரன், வட்டாட்சியா்கள், அரசு அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், பயனாளிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com