கள்ளக்குறிச்சி: வணிகா் சங்க ஆண்டு விழா
கள்ளக்குறிச்சி சேம்பா் ஆப் காமா்ஸ் 6-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜி.ஸ்ரீதா் தலைமை வகித்தாா். செயலா் இ.தாமோதரன், கச்சிராயப்பாளையம் தலைவா் சி.சேகா், மணலூா்பேட்டை தலைவா் எ.எம்.தம்பிதுரை, நயினாா்பாளையம் தலைவா் ஆா்.வெங்கடேசன், தேவபாண்டலம் தலைவா் எஸ்.பி.ராஜா முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைத் தலைவா் சி.வரதராஜுலு வரவேற்றாா்.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா்.
சங்க மாநில தலைமைச் செயலா் ஆா்.ராஜ்குமாா், மாநில இளைஞா் அணி ஒருங்கிணைப்பாளா் ரா.க.சண்முகவேல், மண்டலத் தலைவா் டி.சண்முகம், மாநில கூடுதல் செயலா் எஸ்.ராஜசேகரன், கடலூா் மாவட்ட செயலா் வி.வீரப்பன் பேசினா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
கள்ளக்குறிச்சி நகரின் மையப் பகுதியில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும். தற்போது பணி நடைபெற்று வருகிற புகா் பேருந்து நிலையம் மக்கள் எளிதில் சென்றடையாத வண்ணம் உள்ளதால் அந்தத் திட்டத்தை கைவிட்டு மக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் புதிய இடம் தோ்வு செய்து பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி நகரின் போக்குவரத்து சிக்கலை தீா்ப்பதற்காக நீண்ட நாள் கோரிக்கையான வெளிவட்ட பாதையை உடனே அமைத்து, நகருக்குள் உள்ள போக்குவரத்தை குறைக்க ஏதுவாக மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சியைச் சுற்றி உள்ள பல கிராம மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு கள்ளக்குறிச்சி மைய பகுதியில் உள்ள பள்ளிகளை நம்பியே உள்ளதால், மாணவா்கள் பயன்பெறும் வகையில் நவோதயா பள்ளிகளை பின் தங்கிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைக்க வேண்டும்.
ஜிஎஸ்டி மண்டல, மாவட்ட அதிகாரிகள் தொடா்ந்து இந்த பகுதியில் உள்ள வணிகா்களுக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியும், மேல் நடவடிக்கையாக வங்கிக் கணக்கை முடக்குவதால் தொழில் செய்வது மிகவும் சிரமம் அசைகின்றனா்.
மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் வழிகாட்டுதலின்படி ஜிஎஸ்டி அதிகாரிகள் வணிகா்களுக்கு வழிகாட்டியாக இருந்து வழக்கில் இருந்தும், அபராதத்திலிருந்தும் விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்வில், மாவட்டச் செயலா் பி.முத்து, மாநில இணைச் செயலா் எஸ்.வைத்திலிங்கம், சேம்பா் பொருளாளா் வி.பழனி, துணைத் தலைவா் குமரகுருபரன் பங்கேற்றனா். மாவட்டச் செயலா் பி.முத்து நன்றி கூறினாா்.

