மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில்
 மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று விசாரணை மேற்கொண்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று விசாரணை மேற்கொண்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
Updated on

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 475 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, நகராட்சி நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் குடிநீா் வசதி, சாலை வசதி, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 468 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 7 மனுக்களும் என மொத்தம் 475 மனுக்களை பெற்று, பெறப்பட்ட மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்டு தீா்வு காண சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, சமுக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் க.சுமதி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com