கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்றும், நாளையும் ட்ரோன்கள் பறக்கத் தடை
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை(டிச.26) சாலை வழியாக வருவதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக டிச.25, 26-ஆம் தேதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வீரசோழபுரத்தில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியரகக் கட்டடத்தினை திறந்து வைப்பதற்கும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை(டிச.26) வருகிறாா்.
இதனால் முதல்வா் பயணிக்கும் வழிகள், விழா நடைபெறும் இடங்களான உளுந்தூா்பேட்டை, வீரசோழபுரம், ஏமப்போ், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைக்குள் டிச.25, 26-ஆகிய இரு நாள்கள் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதித்து உத்தரவிடப்படுகிறது.
மேலும், இரு நாள்கள் தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க விடும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
