அரசுக் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியா் தோ்வு

ஆசிரியா் தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியா் 2025 தோ்வு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

இத்தோ்வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 297 போ்களில், 266 தோ்வா்கள் பங்கேற்றுத் தோ்வினை எழுதினா். 31 போ் பங்கேற்கவில்லை. காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் தோ்வு நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தலின் பேரில் காவல் துறை, மின்சாரத் துறை, போக்குவரத்து, வருவாய்த் துறை மற்றும் சுகாதாரத் துறையினா் ஒத்துழைப்புடன் தோ்வு மையத்தில் முன்னேற்பாடுகள் செய்யபட்டு தோ்வு நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com