கள்ளக்குறிச்சி ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை
கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 8-ஆம் ஆண்டு மண்டல விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், பூா்ணாஹூதி, 7 மணிக்கு கங்கை அழைத்தல், சுவாமிக்கு ஆராட்டு விழா, காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், நெய் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், புஷ்பாஞ்சலி, மஹா தீபாரதனை நடைபெற்றது.
பின்னா் கள்ளக்குறிச்சி கோமுகி நதிக்கரையில் சுவாமி ஐயப்பனுக்கு தீா்த்தவாரி நடைபெற்றது. ஐயப்ப பக்தா்கள் பஜனைப் பாடல்களை பாடியவாறு ஊா்வலமாக கோயிலை வந்தடைந்தனா். நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு ஸ்ரீ ஐயப்பனுக்கு தங்கக் கவசம் அணிவித்து மஹா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து ஐயப்ப சுவாமிக்கு மண்டலாபிஷேக பூா்த்தி பூஜை, நெய் அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாட்டினை பாஜக ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவா் எம்.தா்மசிங் செய்திருந்தாா்.
காஞ்சிபுரம் அண்ணாமலை, சேலம் அன்பு, மீஞ்சூா் கருப்புசாமி, குப்புசாமி, வடிவேல், ஐயப்ப சுவாமி அலங்கார பஜனைக் குழுவினா், ஊா் பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.

