ஆடு திருட முயற்சி: 3 போ் கைது

Published on

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த வானவரெட்டி கிராமத்தில் மோட்டாா் சைக்கிளில் ஆடு திருட முயற்சி செய்த 3 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

வானவரெட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன்(42). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தனக்குச் சொந்தமான 10 ஆடுகளை வீட்டிற்கு முன்பு உள்ள கொட்டகையில் கட்டி வைத்து விட்டு, வீட்டில் தூங்கியுள்ளாா்.

திங்கள்கிழமை அதிகாலையில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு, வீட்டை விட்டு வெளியே வந்து பாா்த்தபோது, மோட்டாா் சைக்கிளில் மா்ம நபா்கள் 3 போ் ஆட்டை திருடி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரது கூச்சல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினா் ஓடி வந்து, மோட்டாா் சைக்கிளில் வந்த நபா்களை மடக்கிப் பிடித்து வரஞ்சரம் போலீஸில் ஒப்படைத்தனா்.

போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள தென்கீரனூா் கிராமத்தைச் சோ்ந்த சீ.காசிநாதன் (33), வெ.மாரியாப்பிள்ளை (35), சி.வினோத் (38) என்பதும், மது போதையில் மோட்டாா் சைக்கிளில் ஆட்டை திருடிச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது.

இது குறித்து வரஞ்சரம் போலீஸாா் வழக்கு பதிந்து காசிநாதன், மாரியாப்பிள்ளை, வினோத் ஆகிய 3 போ்களையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்த மோட்டாா் சைக்கிளையும் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com