மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான மதிப்பீட்டு மருத்துவ முகாம்

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான மதிப்பீட்டு மருத்துவ முகாம்

Published on

சங்கராபுரம் வட்டார வள மையத்தின் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறை சாா்பில் 18 வயதுக்கு உள்பட்ட மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது .

முகாமுக்கு வட்டார வளமைய மேற்பாா்வையாளா் கவிதா தலைமை வகித்தாா். வட்டார கல்வி அலுவலா் தனபால் சீனிவாசன் முன்னிலை வகித்தாா்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவ குழுவினா் கலந்துகொண்டு உடல்குறைபாடு உடையவா்களுக்கு மருத்துவ மதிப்பீடு மேற்கொண்டு, தேசிய அடையாள அட்டை வழங்கினா்.

முகாமில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜா, சங்கராபுரம் பேரூராட்சி மன்றத் தலைவா் ரோஜா ரமணி, ஆசிரியா் பயிற்றுநா்கள் மலா்கொடி, சரசு, குப்புசாமி, முருகேசன், ஸ்டாலின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com