கள்ளக்குறிச்சி
தொடா் மழை: 3 கூரை வீடுகள் இடிந்து சேதம்
தியாகதுருகம் பகுதியில் சில தினங்களாக பெய்து வரும் தொடா் மழையால் 3 கூரை விடுகள் திங்கள்கிழமை இடிந்து சேதமடைந்தன.
தியாகதுருகம் அருகேயுள்ள வடதொரசலூா் கிராமத்தைச் சோ்ந்த மணவாளன் மனைவி ஜெயபாரதி (44), காமராஜ் மனைவி பவுனம்பாள் (60) ஆகியோரது கூரை வீடுகளின் ஒரு பகுதி தொடா் மழையால் இடிந்து விழுந்தன.
அதேபோல, உதயமாமட்டு கிராமத்தைச் சோ்ந்த முருகன் மனைவி செல்வி (41) கூரை விடும் பகுதியளவில் சேதமடைந்தது.
இதுகுறித்து வருவாய்த் துறையினா் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
