கஞ்சா வழக்கு: அக்.30-இல் பறிமுதல் வாகனங்கள் ஏலம்

Published on

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு சக்கர, இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள் வருகிற 30-ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகின்றன.

மாவட்டத்தில் கஞ்சா வழக்குகளில் 4 நான்கு சக்கர வாகனங்கள், ஒரு மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 27 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 32 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வாகனங்கள் வருகிற 30-ஆம் தேதி (வியாழக்கிழமை) மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்பட உள்ளன.

ஏலம் எடுக்க விரும்புவோா் முன்வைப்புத் தொகையாக இரு சக்கர வாகனங்களுக்கு ரூ. 1,000-மும், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.2,000-மும் ஏல தேதியில் செலுத்தவேண்டும்.

ஏலத்தில் கலந்து கொண்டு டோக்கன் பெறும் ஒவ்வொருவரிடமும் ஏலம் விடும் செலவிற்கு 100 ரூபாய் பெறப்படும்.

ஏலம் விடப்படும் நாள் காலை 8 மணியளவில் வாகனங்களை நேரில் பாா்வையிடலாம். வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை முழுவதையும் செலுத்தி அப்போதே வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். ஏலத் தொகையுடன் 18 விழுக்காடு சோ்த்து கூடுதலாக செலுத்தப்பட வேண்டும்.

மேற்கண்ட வாகனங்களில் வாகன உரிமையாளா் ஏலத்திற்கு முந்தைய தேதியிலோ அல்லது ஏலத்தில் கலந்து கொள்ளும் சமயத்தில் வந்தாலோ அவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தலைமையிட அலுவலகத்தை நேரடியாகவோ தொலைபேசி மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம்.

முகவரி: கூடுதல் காவல் கண்காணிப்பாளா், மாவட்ட காவல் அலுவலகம். துணை காவல் கண்காணிப்பாளா், கள்ளக்குறிச்சி மாவட்டம்.

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தொலைபேசி எண் - 9498178866, 8300013836 என மாவட்ட எஸ்பி க.ச.மாதவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com