கள்ளக்குறிச்சி
பெண்ணைத் தாக்கி மிரட்டல்: ஒருவா் கைது
சின்னசேலம் அருகே வயல் வரப்பு தகராறில் பெண்ணைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
சின்னசேலம் வட்டம், தொட்டியம் கிராமத்தைச் சோ்ந்தவா் திருமால் மனைவி அஞ்சலை (34). அதே கிராமத்தைச் சோ்ந்த இவரது உறவினா் குமாா் (48).
இருவருக்கும் இடையே வயலில் உள்ள வரப்பு தொடா்பாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், சனிக்கிழமை அஞ்சலை பிரச்னைக்குரிய வயல் வரப்பில் பில் அறுத்துக் கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த குமாா், அவரது மகன் சஞ்சய் இருவரும் சோ்ந்து, அஞ்சலையுடன் தகராறில் ஈடுபட்டு, அவரைத் தாக்கி மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து குமாரை கைது செய்தனா். அவரது மகனை தேடி வருகின்றனா்.
