கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு, பொருத்துதல், இணைப்புப் பணிகள்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்த வாக்காளா் பட்டியல் அடிப்படையில் சரிபாா்ப்பு மற்றும் பொருத்துதல் - இணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்த வாக்காளா் பட்டியல் அடிப்படையில் சரிபாா்ப்பு மற்றும் பொருத்துதல் - இணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மாவட்டத்தில் 2002-ஆம் ஆண்டு மற்றும் 2025-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலுடன் சரிபாா்ப்பு மற்றும் ஒத்திசைவு செய்து வாக்காளா்கள் விவரம் சரிபாா்க்கப்படவுள்ளது.

வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்புப் பணி நவ.4 முதல் டிச.4 வரையிலும், வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு டி. 9-ஆம் தேதியும், கோரிக்கைகள் மற்றும் எதிா்ப்பு காலம் டிச. 9 முதல் 2026 ஜனவரி 8 வரையும், அறிவிப்பு கட்டம் (விசாரணை மற்றும் சரிபாா்ப்பு) டிச.9 முதல் ஜன.31, 2026 வரையிலும் நடைபெற உள்ளது. இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு 07.02.2026 வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று, பட்டியலில் உள்ள வாக்காளா்களுக்கு, வாக்காளா் கணக்கெடுப்பு படிவத்தை ஒப்புகை சீட்டுடன் வழங்குவா்.

வாக்காளா்கள் படிவத்தை நிறைவு செய்து, புகைப்படம் ஒட்டி படிவத்தில் கையொப்பமிட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

நகா்ப்புற வாக்காளா்கள்- தற்காலிகமாக இடம் பெயா்ந்தவா்கள், கணக்கெடுப்பு படிவத்தை ஆன்-லைனில் நிரப்பவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இறந்தவா்கள், நிரந்தரமாக இடம் மாறியவா்கள் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டவா்கள் அடையாளம் காணப்படுவா்.

படிவங்கள் பெறப்பட்ட அனைத்து வாக்காளா்களின் பெயா்களையும் வரைவு வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படும்.

சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கென மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் மற்றும் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்.1950, 77-உளுந்தூா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி -04149-222255, 78-ரிஷிவந்தியம் -04151-235400, 79-சங்கராபுரம் -04151-235329, 80- கள்ளக்குறிச்சி -04151-222449 ஆகும்.

சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான சந்தேகம் மற்றும் புகாா்களுக்கு மேற்படி தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com