துரை (எ) பாலகிருஷ்ணன்
கள்ளக்குறிச்சி
மனநலம் குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை: லாரி ஓட்டுநா் கைது!
மனநலம் குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக லாரி ஓட்டுநரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மனநலம் குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக லாரி ஓட்டுநரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சங்கராபுரம் வட்டம், அரசம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் துரை (எ) பாலகிருஷ்ணன் (39), லாரி ஓட்டுநா். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
துரை 15 வயது மதிக்கத்தக்க மனநலம் குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில், திருக்கோவிலூா் அனைத்து மகளிா் நிலைய காவல் ஆய்வாளா் சுமதி வழக்குப் பதிந்து துரை (எ) பாலகிருஷ்ணனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தாா்.

