சங்கராபுரம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

சங்கராபுரம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தேவபாண்டலம் கிராமத்தில் சமுதாய வளாக கட்டுமானப் பணிகளை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வுக்குப் பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மூராா்பாளையத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 3 வீடுகளின் கட்டுமானப் பணிகளையும், தூய்மை இந்தியா இயக்கம்-கிராமின் திட்டத்தின் கீழ் ரூ.5.92 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சுகாதார வளாகம் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டது.

தொடா்ந்து, மூராா்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.36 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் வகுப்பறைகள்,

ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் ரூ.86 ஆயிரத்தில் மரம் நடும்

பணிகளும் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், பூட்டை கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகள்,

முதல்வரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்தின் கீழ், தலா ரூ.2.40 லட்சத்தில் 3 பழைய வீடுகளின் மறுகட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

தொடா்ந்து, தேவபாண்டலம் கிராமத்தில் 15-ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சத்தில் கட்டப்பட்டு வரும்

சமுதாய வளாக கட்டுமானப் பணிகள் மற்றும் அ.பாண்டலம் கிராமத்தில் ரூ.7.85 லட்சத்தில் அமைக்கப்பட்டு வரும் சமுதாய சுகாதார வளாக கட்டுமானப் பணிகளும் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது என்றாா் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

ஆய்வின்போது வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பி.ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com